"சாப்டுட்டு இருக்கோம்ல பொறுயா .." - நட்ட நடு ரோட்டில் மரத்தை உடைத்து போட்டு யானைகள் அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள மூலக்கடை பகுதியில் சாலையில் முகாமிட்டு இருந்த 2 காட்டு யானைகள் மரக்கிளைகளை உடைத்து சாலையில் போட்டன. பின்னர் அதில் இருந்த இலைகளை சாப்பிட்ட யானைகள் வாகனங்களுக்குக்கு வழிவிடாததால் அய்யன்கொல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரைமணி நேரத்திற்கு பிறகு யானைகள் மனது மாறி காட்டுக்குள் சென்ற பின்னர் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.