நீலகிரியை மூடிய மரங்கள்.. 2 நாளாக இருளில் மூழ்கி கிடக்கும் ஊட்டி | Ooty
நீலகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக வீசிய சூறைக்காற்றால் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்தது.
இதனால், உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. சாலைகளில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சூறைக்காற்றால் 150க்கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்களும், ஐந்து இடங்களில் டிரான்ஸ்பார்மர்களும் சாய்ந்துள்ளன. இதனால், உதகை நகர் பகுதி மற்றும் மலை கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மின்சாரம் இல்லாததால், குடிநீர் விநியோகமும் தடைபட்டுள்ளது. மரங்களை அகற்றுதல், மின்கம்பங்களை சீர் செய்தல் ஆகிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. உதகையில் உள்ள மேரிஸ் ஹில் என்னும் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லை... அப்பகுதியை சேர்ந்த மைக் செட் போடும் நபரான சுரேஷ், தனது ஜெனரெட்டர் மூலம் அனைவரும், தங்களது செல்போன்களை சார்ஜ் செய்ய உதவி வருகிறார்.