நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து, தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஒசூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, ஊழியர்களை நீலகிரி மலை ரயிலில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்தது. இதற்காக 4 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு நீலகிரி மலை ரயிலை, ஒசூர் நிறுவனம் வாடகைக்கு எடுத்தது. தொடர்ந்து 140 ஊழியர்களை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை மலை ரயிலில் அழைத்து சென்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.