பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் - அதிர்ச்சி காரணம்

Update: 2024-10-07 14:13 GMT

கோகால் பகுதியில் 1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 290 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு சிதிலமடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால், 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறை இல்லாமல் திறந்தவெளியில் படிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில், புதிய கட்டிடம் கட்டுவதாக அரசு உறுதி அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, மாணவர்களளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய உதகை கோட்டாட்சியர் மகாராஜா, 2 மாதம் அவகாசம் கேட்டார். இதனை ஏற்க மறுத்துள்ள பழங்குடி மக்கள், வரும் திங்கட்கிழமை வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்