மண்ணில் புதையும் வீடுகள்..அடுத்த நிலச்சரிவு நீலகிரியிலா? - வயநாட்டை கண் முன் நிறுத்தும் காட்சி

Update: 2024-08-25 07:12 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கோக்கால் பகுதியில் கட்டடங்கள் மண்ணில் புதையத் துவங்கிய நிலையில், இந்திய புவியியல் துறை வல்லுநர்கள் இதுகுறித்து ஆய்வு செய்துள்ளனர்...கோக்கால் பகுதியில் கடந்த மாதம் பெய்த மழையில் வீடுகள் மற்றும் முதியோர் காப்பகத்தின் கட்டடங்கள் மண்ணில் 6 முதல் 8 அடி ஆழத்திற்கு புதைந்தன...வயநாடு நிலச்சரிவு நடைபெற்ற நேரத்தில் இச்சம்பவம் ஏற்பட்டதால் பயத்தின் உச்சிக்கே சென்ற அப்பகுதி மக்கள் நிலச்சரிவு ஏற்படுமா என்ற அச்சத்தில் தூக்கத்தைத் தொலைத்து அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய புவியியல் துறை வல்லுநர்கள் 4 பேர் முழு ஆய்வுப் பணியைத் துவங்கினர்...இதில் பூமிக்கு அடியில் நீரோட்டம் செல்வது உறுதியானது. 20 நாள்கள் முழு ஆய்வு முடிவடைந்த நிலையில் அதன் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் இந்திய புவியியல் துறையினர் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் பிளவு ஏற்படுவதற்கான காரணம் என்ன? கட்டடங்கள் தாழ்வான பகுதிக்கு சரியாமல் பூமிக்குள் புதைந்து வருவது ஏன்? மழைக்காலம் முடியும் வரை லேசாக இடிந்துள்ள வீடுகளில் மக்கள் குடியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்