ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞரின் கடைசி திக் திக் நிமிடம் - கதறி துடிக்கும் தாயார்
செவ்வாயன்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை முட்டி மதுரை விளாங்குடியைச் சேர்ந்த 22 வயதான மாடுபிடி வீரர் நவீன்குமார் மார்பு, கழுத்து பகுதிகளில் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டபோது, நவீன்குமாரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மதுரை - கோரிப்பாளையம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை அரசு நடத்தும்போது, உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற கூடன் அரசு தரப்பில் யாருமே வராதது வேதனையாக உள்ளதாக உறவினர்கள் குமுறினர்.