பாகற்காய் தோட்டத்தில் பறிபோன கள்ள காதலர்கள் உயிர் - நடந்தது என்ன?.. திகில் கிளப்பும் பின்னணி

Update: 2025-01-15 14:08 GMT

நிலக்கோட்டையை அடுத்த மைக்கேல்பாளையத்தை சேர்ந்த சகாயராஜ் - ஆலீஸ் தம்பதி. சகாயராஜ், பெங்களூருவில் உள்ள தனியார் கிரானைட் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்த நிலையில், இவரது மனைவி ஆலீஸ் மற்றும் 10 வயது மகனும் கிராமத்தில் தனியாக வசித்து வந்தனர்.

இதில், அப்பகுதியைச் சேர்ந்த ஜெபஸ்டீன் ஜீவா என்பவரும், ஆலீஸ்-ம் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், இவ்விருவரும் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், ஒரு பாகற்காய் தோட்டத்தில், ஆலீஸ் விஷம் குடித்த நிலையிலும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஜெபஸ்டீன் ஜீவாவும் சடலமாக கிடந்து உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை டி.எஸ்.பி. செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இது த*கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்