IIT மாணவிக்கு நேர்ந்த கொடுமை... சிக்கிய `வக்கிரன்'... யார் இவன்..? வெளியான பரபரப்பு பின்னணி

Update: 2025-01-15 14:14 GMT

சென்னை ஐஐடியில் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர்.

ஜனவரி 14ஆம் தேதி, ஐஐடி அருகே உள்ள ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு டீக்கடை ஒன்றில் டீசர்ட் அணிந்தபடி மதுபோதையில் வந்த மர்மநபர் ஒருவர், மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்து உள்ளார்.

தொடர்ந்து மாணவி கூச்சலிட்டதால், அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்து உள்ளனர். விசாரணையில், அவர் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பேக்கிரி ஊழியரான ஸ்ரீராம் என்பது தெரியவந்தது. இவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஐஐடியில் தற்போது நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்