உணவுக்காக வீட்டின் கதவு, ஜன்னலை முட்டி உடைத்த யானை - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-10-02 12:31 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, உணவுக்காக வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் கதவை, காட்டு யானை முட்டித்தள்ளிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி பகுதியில், இரவு வந்த ஒற்றைக் காட்டு யானை அங்குள்ள ராஜன் என்பவரது வீட்டின் முன் வந்து நின்றது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில், நீண்ட நேரமாக வீட்டின் கதவு முன் நின்ற அந்த யானை, ஜன்னல் கண்ணாடியை முட்டி உடைத்தது.

பின்னர் கதவையும் முட்டிய அந்த யானை, நீண்ட நேரத்திற்குப்பின் வேறு பகுதிக்குச் சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்