கடந்த மே 5-ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங் களில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் 49 பேரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தனது 3-ஆவது குற்றபத்திரிக்கையை ராஜ்குமார் சிங், சுரேந்திர குமார் ஷர்மா, ராகேஷ் ரஞ்சன், சசிகாந்த் பாஸ்வான் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக தாக்கல் செய்துள்ளது. 5 ஆயிரத்து 500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் 298 சாட்சிகளையும், 290 ஆவணங்களையும், 45 ஆதாரங்களையும் இணைத்துள்ளது.இதுவரை 40 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் புலன்விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.