"நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்" - அமைச்சர் கொடுத்த அதிரடி பதில் | DMK
பூந்தமல்லியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொழிற்பயிற்சி நிலையத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு நூல் கட்டுநர் பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அந்த பயிற்சி நிலையத்தில் நூல் கட்டுநர் பயிற்சி நிறுத்தப்படுவதாக அண்மையில் அரசாணை வெளியானதை அடுத்து, பார்வை மாற்றுத் திறனாளிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து, அரசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர், பூந்தமல்லி தொழிற்பயிற்சி நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நூல் கட்டுநர் பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.