நாமக்கல் ஆட்சியர் உமா இரவு 10 மணி அளவில் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நோயாளியிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அரசு மருத்துவரிடம் மருத்துவமனையில் போதிய வசதிகள் உள்ளனவா?... உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். இதனை அடுத்து பள்ளிபாளையம் அரசு மாணவர் விடுதிக்குச் சென்ற ஆட்சியர் மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா, போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் இரவு நேரத்தில் அதிரடியாக பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளது, அரசு அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...