சபாநாயகர் காரை மறித்து போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள்... அதிரடி காட்டிய போலீஸ்! நெல்லையில் பரபரப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் நயினா முகமது, குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, அவ்வழியாக வந்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாகனத்தையும் மறித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு பாதுகாப்பாக வந்த காவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சட்டவிரோதமாக செயல்படுதல், சாலை மறியலில் ஈடுபடுதல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.