குஜராத் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்யும் தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழை சூழல் குறித்தும், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் மாநில முதல்வர் புபேந்திர பட்டேலை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். குஜராத் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்தார்.