சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரை மாநகருக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும், மதுரை மாநகரில் சாக்கடை நீரும் குடிநீருடன் கலந்து வரக்கூடிய நிலையில் அரசு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்தார்...
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கம்பத்தில் இருந்து மதுரைக்கு நீர் கொண்டு செல்லும் பணியை அதிமுக ஆரம்பித்தாலும் கிணறு தோண்டும் அனுமதியை பெறாமல் இருந்ததாகத் தெரிவித்தார்... 160 எம்.எல்.டி தண்ணீர் கொண்டு வர பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆட்சியில் 60 கிலோ மீட்டருக்கு பைப் லைன் போடாமல் விட்டதால் தற்போது அந்த பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், 15 கிலோ மீட்டர் பைப் லைன் போட வேண்டிய பணிகள் உள்ளதை அடுத்து, அந்த பணிகளும் விரைவில் நிறைவு பெற்று முதலமைச்சர் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைப்பார் என அமைச்சர் நேரு குறிப்பிட்டார்...