"மணிப்பூர் விவகாரம்" மனிதச் சங்கிலி ஊர்வலம் வந்த கிறிஸ்தவ பேராயர்கள்,கன்னியாஸ்திரீகள் | Chennai

Update: 2023-09-17 03:17 GMT

சென்னை சாந்தோம் தேவாலய சாலையில், மணிப்பூரில் அமைதி நிலவ நடவடிக்கைகள் எடுக்க வேண்டி, மனித சங்கிலி நடைபெற்றது. தமிழக துறவியர் பேரவை சார்பில் கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலியில், திரளான கிறிஸ்தவ பேராயர்கள், கன்னியாஸ்தீரிகள் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மயிலை மாவட்ட அருட்தந்தை ஜார்ஜ் அந்தோனிசாமி, அரசியலுக்கு அப்பால் மனித நேயத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தினார். அனைவரும் ஒற்றுமையாக மணிப்பூர் மக்களுக்கு உதவ வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்