திருச்சி ரவுண்டானாவில் 52அடி உயரம்.. மேஜர் சரவணன் முன் கெத்தாக பறக்கும் கொடி.. ஒன்று கூடிய ராணுவம்..
கார்கில் போரில் வீரமரணமடைந்த, வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் சரவணன் நினைவு ரவுண்டானா திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. கார்கில் போரின் 25ம்ஆண்டு வெற்றிவிழாவை முன்னிட்டு, மேஜர் சரவணனின் 52வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் 52 அடி உயர கொடிக்கம்பத்தில் அங்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் மலர் வளையம் வைத்து, தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர். மேஜர் சரவணன் நினைவு ரவுண்டானா பகுதியில் தேசியக்கொடி 24 மணி நேரமும் பறக்க அனுமதி பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....