மதுரையில் பரபரப்பு.. பேரணியை தடுத்ததால் பெரும் பதற்றம்.. போலீஸ்-போராட்டகாரர்கள் இடையே தள்ளுமுள்ளு

Update: 2024-05-28 14:29 GMT

மதுரையில் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து வருமான வரித்துறை அலுவலகம் வரை விவசாயிகள் பேரணியாக செல்ல இருந்த நிலையில் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தல்லாகுளத்தில் இருந்து வருமான வரித்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்