மதுரை மாவட்டம் வாடிபட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கட்டக்குளத்தைச் சேர்ந்த ஆனந்தி 12ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல காலை பள்ளிக்கு வந்த ஆனந்தி பள்ளி வளாகத்தில் நடந்தபோது திடீரென மயங்கி விழுந்து இருக்கிறார். உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் ஆனந்தியை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனந்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். மாணவிக்கு ஏதேனும் உடல் நலக்குறைபாடு இருந்ததா அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.