`சங்கராபுரம் ஊராட்சிமன்ற தேர்தல்' மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில், பிரியதர்ஷினியின் வெற்றி செல்லாது என்றும், தனது வெற்றியே செல்லும் என்று அறிவிக்க கோரியும், உயர் நீதிமன்றத்தில் தேவி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் தேவியின் வெற்றி செல்லும் என அறிவித்தது. தொடர்ந்து சிவகங்கை மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் பிரியதர்ஷினி மனுத்தாக்கல் செய்த நிலையில், பிரியதர்ஷினியின் வெற்றி செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மீண்டும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தேவி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், தேவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, உள்ளாட்சி தேர்தலில் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினியின் வெற்றியை உறுதி செய்து உத்தரவிட்டது.