#JUSTIN || சாமி ஆடிய மாணவிகள்... மாவட்ட நிர்வாகம் பரபரப்பு விளக்கம்

Update: 2024-09-07 07:29 GMT

மதுரையில் நடைபெற்ற அரசு புத்தகத் திருவிழாவில் மேடையில் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டபோது பள்ளி மாணவிகள் சாமியாடி மயங்கி விழுந்தத சம்பவம் சர்ச்சையான நிலையில், கலை நிகழ்வுகளின் ஒரு பகுதியாகவே கருப்பசாமி வேடமடைந்து கிராமிய இசையை சேர்ந்த அந்த பாடல் ஒளிபரப்பப்பட்டது என மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது.

தொடக்க நிகழ்ச்சியாக கண்காட்சியை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மேயர் இந்திராணி ஆகியோர் தொடங்கிவைத்தனர் இதனையடுத்து நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மேடையில் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட கலந்துகொண்டு உரையாற்றினர். பின்னர் சிறிது நேரத்தில் தொடக்க விழா நிகழ்வாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது அப்போது பக்தி பாடல் இடம் பெற்று ஒளிபரப்பப்பட்டு கலைஞர்கள் ஆடிக் கொண்டிருந்தபோது கீழே ஒருவர் கருப்புசாமி வேடம் அடைந்து மாணவர்கள் மத்தியில் உலா வந்தார் அப்போது மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த பள்ளி மாணவிகள் நடனம் ஆடத் தொடங்கினர் அதில் சில மாணவிகள் உணர்ச்சிவசப்பட்டு அதனைக் கேட்டு சாமிஆடினர்

அப்போது சில மாணவிகள் மயங்கி விழுந்த போது அங்கிருந்த பொதுமக்கள் அவர்களுக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து இருக்கையில் அமர வைத்தனர்.

அப்போது அங்கு இருந்த சிலர் இது போன்ற அரசின் நிகழ்ச்சியில் பக்தி பாடல் போட்டது ஏன் கேள்விகேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர் இதனையடுத்து கலை நிகழ்ச்சி உடனடியாக முடிக்கப்பட்டு அனைவரும் புறப்பட்டு சென்றனர் அரசு நிகழ்ச்சியில் பக்தி பாடல் ஒளிபரப்பப்பட்டு அதில் மாணவிகள் சாமியாடி மயங்கி விழுந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்

தற்போது அதற்கான விளக்கத்தினை மதுரை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ளது இதுகுறித்து மாவட்ட நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்ன

மதுரை நடைபெற்ற அரசு புத்தக திருவிழாவில் "கலை நிகழ்வுகளின் ஒரு பகுதியாகவே கருப்பசாமி வேடமடைந்து கிராமிய இசையை சேர்ந்த அந்த பாடல் ஒளிபரப்பாகியுள்ளது. மாணவிகள் யாரும் மயங்கவில்லை, பத்திரமாக உள்ளனர். மாணவிகள் மகிழ்சியாக ஆடியதால் தான் அந்த பாடல் தொடர்ந்து ஒலிக்க அனுமதிக்கப்பட்டது. மேலும் கருப்புசாமி வேடமடைந்து இசை ஒளிபரப்பு செய்தது கிராமிய கலையைச் சேர்ந்ததை தவிர இது பத்தி பாடல் கிடையாது என்றும் இதில் வேறு நோக்கமில்லை" என மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்