மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா தேதி அறிவிப்பு

Update: 2024-07-01 16:15 GMT

உலகப்புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ள இத்திருவிழாவில் மீனாட்சியம்மன் வெள்ளி அன்னம், நந்தி, யானை, கிளி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி காலை மாலை என இரு வேளைகளிலும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்