`கூல் லிப்' வழக்கில் திருப்பம்... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு | Court
கூல் லிப் புகையிலை வழக்கில், அதன் தயாரிப்பு நிறுவனங்களை எதிர் மனுதாரகாக சேர்க்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கூல் லிப், குட்கா போன்றவற்றை விற்பனை செய்ததாக
பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், ஜாமீன் மற்றும் முன்
ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்படும் மனுகளை
உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நீதிபதி பரத சக்கரவர்த்தி
விசாரணை செய்து வருகிறார்.
கூல் லிப்பை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது
என்பது தொடர்பாக மத்திய சுகாதார துறை, பள்ளி கல்வி துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார்.
ஹரியானா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த மூன்று கூல் லிப் தயாரிப்பு நிறுவனங்களை
இந்த வழக்கில் நீதிமன்றமே தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக சேர்த்து, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.