கத்தாரில் உளவு; கழுத்தில் கத்தி... 8 Ex இந்திய நேவி வீரர்களும் ரிலீஸ்... சம்பவம் செய்த இந்தியா
கத்தார் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய கடற்படை முன்னாள் வீரர்களுக்கு கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, இந்திய அரசின் பேச்சு வார்த்தைக்குப்பின் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், முன்னாள் வீரர்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, முன்னாள் வீரர்களில் 7 பேர் இந்தியா திரும்ப இருப்பதாகவும், ஒருவர் கத்தாரில் தங்குவதாகவும், இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.