கிட்னிக்குள் சிக்கி கொண்ட பேஸ்கட்.. ஆபத்தான நிலையில் உயிர் - `என்னால முடியல'.. கைவிரித்த மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் மருத்துவமனைக்கு வயிற்றுவலி எனக்கூறி சிகிச்சைக்கு சென்றிருக்கிறார். சிகிச்சையில், கிட்னியில் கல் இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள், அதனை அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்ற அறிவுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, கடந்த மாதம் 23ம் தேதி அறுவை சிகிச்சையும் நடந்திருக்கிறது. இந்த அறுவை சிகிச்சையின் போது, ஸ்டோன் பேஸ்கட் என்னும் சாதனம் கிட்னிக்குள்ளே சிக்கிக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனை வெளியே எடுக்க முடியாமல் தவித்த மருத்துவர்கள், பெண்ணை அவசர அவசரமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிபாரிசு கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பி வைத்ததாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.