பத்திரப்பதிவு ஆபிஸில் விடிய விடிய சோதனை..! காரில் தப்பியோடிய சார்பதிவாளர்... அதிரடி காட்டிய அதிகாரிகள்.. கோவையில் பரபரப்பு

Update: 2024-08-08 01:50 GMT

சார்பதிவாளர்களாக பணியாற்றும் அருணா மற்றும் ரமேஷ் மீது அடுக்கடுக்கான லஞ்சப்புகார் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி தலைமையிலான 5க்கும் மேற்பட்ட போலீசார், சார் பதிவளர் அலுவலகத்திற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, காரை எடுத்து தப்பியோடிய அருணாவை அதிகாரிகள் துரத்திச் சென்று பிடித்த நிலையில், காருக்குள் இருந்து இரண்டரை லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அலுவலகத்தின் கதவுகளை அடைத்து, பணியாளர்கள் யாரும் வெளியேறக் கூடாது என உத்தரவிட்ட அதிகாரிகள், இரவு முழுவதும் விடிய விடிய சோதனை நடத்தினர். காலை 7 மணியளவில் முடிந்த இந்த சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சார் பதிவாளர் அருணா-வை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்