கோவையில் பிரபல தனியார் ஹாஸ்பிடலில் அடித்தே கொலை.. களமிறங்கிய கமிஷனர்

Update: 2024-05-29 07:30 GMT

கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் நேற்று அவினாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்குள்ள கம்பிகளை திருட முயற்சித்தாக மருத்துவமனை செக்யூரிட்டிகள் மற்றும் நிர்வாகத்தினர் அவரை பிடித்து அடித்தாக தெரிகிறது. அடித்ததில் அவர் மயக்கமடைந்ததாக கூறப்படும் நிலையில் அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராஜாவின் மனைவி சுகன்யா அளித்த புகாரின்பேரில், மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் மருத்துவமனை நிர்வாகத்தினர்11 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்