விழுப்புரத்தில் வெளுத்து வாங்கிய பேய் மழை.. வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்..! | Viluppuram Rain
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கானிமேடு பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுப்பேட்டை, அகரம், மண்டகப்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ளவர்கள், சுமார் 25 கிலோமீட்டர் தூரம் சுற்றிச்சென்று மரக்காணம் செல்கின்றனர். அப்பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொய்வடைந்து உள்ளதால், தொடர்ந்து அவதி அடைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.