விடாமல் வெளுத்து வாங்கிய மழை.. பேய் போல் சீறி வரும் வெள்ளம்! போக இடம் இல்லாமல் தவிர்க்கும் மீனவர்கள்
ராமேஸ்வரம் மாவட்டம், பாம்பன் தோப்புக்காடு மீனவர் குடியிருப்பு பகுதிகளில் சுமார் 50- க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மழை விட்டு விட்டு பெய்துவருவதால், அப்பகுதி மீனவர் குடியிருப்பு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரால் சூழ்ந்து காணப்படுகிறது. இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கும் இப்பகுதி மீனவர்கள், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள நீரை அகற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.