வெளியே Spa உள்ளே push`Pa'... பள்ளி அருகே பாலியல் தொழில்...சிக்கிய நெட்ஒர்க் - தந்தி செய்தி எதிரொலி

Update: 2024-11-27 11:08 GMT

கரூரில் அரசுப் பள்ளி அருகிலும், பல்வேறு இடங்களிலும் செயல்படும் ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடப்பதாக நீளம் ரகுவரன் என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் அளித்தார். மேலும், அவர் வெளியிட்ட வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவை தந்தி டிவியில் வெளியானது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், கரூர் சரக டிஎஸ்பி செல்வராஜ் தலைமையிலான போலீசார் ஸ்பாக்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 3 ஸ்பாக்களும் மூடப்பட்டு பூட்டு போடப்பட்டிருந்த‌து. இதையடுத்து அவற்றை சீல் வைத்தனர். இதே போன்று, வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்பாவையும் பூட்டி சீல் வைத்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மற்ற ஸ்பாக்களில் இருந்து தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்