தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டம் தலையாமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மதக்கின்றன. நடவு செய்து 30 நாட்களே ஆன நிலையில், நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆயிரத்து 500 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.