மடமடவென இடிக்கப்பட்ட வீடுகள்.. அதிரடி காட்டிய அதிகாரிகள்.. கலங்க வைத்த சம்பவம்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பு பகுதிகளை அதிகாரிகள் அகற்றி வரும் நிலையில், குடியிருப்புவாசிகளுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக அம்பத்தூர் வட்டாட்சியர் தலைமையில் கணக்கீடு செய்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனை அடுத்து நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டு 21 நாட்களுக்குப் பிறகு நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடங்கியது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கிய நிலையில் சிலர் 11 ஆண்டாக வசிப்பதாக கூறி, ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பத்து நாள் அவகாசம் வழங்கினர். அப்போது, அசல் ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.