"எங்க மேலயே கை வைக்கிறியா நீ"..வீடியோ எடுக்கும்போதே கவுன்சிலருக்கு விழுந்த அடி.. நொறுங்கிய போன்

Update: 2024-07-01 09:05 GMT

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் குறித்த புகாரால் மாடு வளர்ப்பவருக்கும் கவுன்சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது... குமரி மீனாட்சிபுரத்தில் காட்வின் என்பவரின் மாடுகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கவுன்சிலர் அக்‌ஷயா கண்ணன் மாநகராட்சிக்கு புகார் அளித்திருந்தார். இதனால் இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்த நிலையில் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது... தூய்மைப் பணியாளர்கள் தடுக்க முயன்ற போது அவர்களுடன் காட்வின் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார்... இதை அக்‌ஷயா கண்ணன் வீடியோ பதிவு செய்த நிலையில் அவரது செல்போனை காட்வின் தள்ளி விட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்