மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் : சிபிசிஐடி அடுத்தகட்ட நகர்வு

Update: 2022-07-26 23:51 GMT

மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை காவலில் விசாரிக்க கோரிய சிபிசிஐடியின் மனு புதன்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.


கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி புஷ்பராணி, மனு மீதான விசாரணை புதன்கிழமை நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்