ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய நிலையில், அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டாக கருத முடியாது எனவும், இதை தடை விதிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை எனவும், விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தை இயற்ற அதிகாரமுள்ளதாக வாதிட்ட தமிழ்நாடு அரசு, தற்கொலைகள் உள்ளிட்ட அம்சங்களை கொண்டே இந்த சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்தது. இந்த வழக்கில் இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்த நிலையில், தலைமை நீதிபதி அமர்வு இன்று பிற்பகல் 2.15 மணியளவில் தீர்ப்பளிக்கிறது.