இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ரஃபாவில் இஸ்ரேல் தரைவழித்தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையே, ரஃபாவில் ஐநா பாதுகாப்புத்துறையின் வாகனம் தாக்குதலில் சிக்கியதாகவும், அதில் ஐநா ஊழியர்கள் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஐநாவில் பணியாற்றி வந்த இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த வேதனையை பகிர்ந்து கொண்ட ஐநா, தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. மேலும் காசா போரில், சர்வதேச ஐநா ஊழியர் உயிரிழந்திருப்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்பட்டுள்ளது.