ஒரு வாய் தண்ணீருக்காக... மொட்டை வெயிலில்... பாவமாய் நிற்கும் பச்சிளம் குழந்தைகள்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகிலுள்ள இந்திரா நகர் மற்றும் காந்திசாலை கிராம மக்கள், இளையான்குடி சாலையில் அமைந்துள்ள காவிரி கூட்டிக் குடிநீர் தண்ணீர் தொட்டிக்கு தள்ளுவண்டிகளை தள்ளி வந்து தண்ணீர் பிடித்து செல்வது வழக்கம். கடந்த ஆறு மாதங்களாக இங்கு தண்ணீர் சரியாக வராத நிலையில், பச்சிளம் குழந்தைகளோடு மொட்ட வெயிலில் தலையில், முக்காடுகளுடன் தள்ளுவண்டிகளுடன் தண்ணீருக்காக காத்திருந்து தண்ணீரைப் பிடித்து சொல்கின்றனர். தங்கள் பகுதியில் குடிநீர் குழாய் அல்லது நீர் தேக்க தொட்டி அமைக்க கோருகின்றனர்.