6 நாட்களாக வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்பு.. மழைநீரோடு கலந்த ரசாயன கழிவுகள் - குமுறும் மக்கள்
மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட வளசரவாக்கம் கணேஷ் நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அந்த பகுதியில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்து, 6 நாட்களாகியும் வடியாமல் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கி உள்ளது. இதற்கிடையே, மழை நீருடன் கழிவுநீரும், தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளும் கலந்துள்ளதால், அந்த வழியாக கடந்து செல்லும் பொதுமக்களுக்கு அரிப்பு உள்ளிட்ட தோல் நோய்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே தேங்கியுள்ள மழைநீரை அகற்ற முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.