10க்கு 2 கிலோ அரிசி பதுக்கல்-ரேஷன் கடையை சூழ்ந்த பொதுமக்கள்-சங்கரன்கோயில் அருகே பரபரப்பு
சங்கரன்கோவில் அருகே நியாய விலை கடையில் வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக கூறி கடை ஊழியரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் வடக்கு புதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் 2 கிலோ சர்க்கரை வாங்கினால் அதில் ஒன்றரை கிலோ மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் 10 கிலோ அரிசி வாங்கினால் அதில் 8 கிலோ மட்டுமே இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முறையான அளவுகளில் பொருட்களை வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியரிடம் அறிவுறுத்தினர்.