மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளதா? - பத்திரப்பதிவுத்துறை விளக்கம்

Update: 2023-08-19 05:00 GMT

அனைத்து தெரு சர்வே எண்களுக்கும் வழிகாட்டி மதிப்பானது மாற்றியமைக்கப்படவில்லை என பத்திரப்பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு மிக மிக குறைவாக இருந்ததால் வங்கிகளில் சொத்தின் மதிப்பிற்கு ஏற்றாற்போல் கடன் பெற முடியவில்லை என கட்டடம் கட்டி விற்போர் சங்கத்தினர் தெரிவித்த‌தாக கூறப்பட்டுள்ளது. இதனால், பதிவுத்துறை தலைவர் தலைமையில் வழிகாட்டி மதிப்பை சீரமைக்க அமைக்கப்பட்ட மதிப்பீட்டுக்குழு விரிவாக விவாதித்து, மாநகராட்சி, நகராட்சி, கிராமப் பகுதிகளில் உள்ள மனைகளுக்கு குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயம் செய்த‌தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச மதிப்பை விட குறைவாக கொண்டுள்ள தெரு/சர்வே எண்களுக்கு மட்டுமே இம்மதிப்பு மாற்றியமைக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தெரு/சர்வே எண்களுக்கும் வழிகாட்டி மதிப்பானது மாற்றியமைக்கப்படவில்லை என்றும், முன்ன்றிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்