"இங்க குடுடா தம்பி.." சிலம்பத்தை கையில் வாங்கி மாஸ் காட்டிய முன்னாள் அமைச்சர்

Update: 2024-10-07 02:42 GMT

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். சிறுவலூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற செங்கோட்டையன், பள்ளி மாணவர்கள் சிலம்ப பயிற்சி பெற்று வந்ததை ஆர்வமுடன் பார்த்து ரசித்தார். அப்போது அவர் மாணவர்கள் வைத்திருந்த கம்பினை வாங்கி சிலம்பம் சுற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்