தமிழகத்தையே உலுக்கிய சிறுமி மரணம்... கூல்டிரிங்ஸ் டெஸ்டில் திடீர் திருப்பம்..டுவிஸ்டான ரிசல்ட்
தமிழகத்தையே உலுக்கிய சிறுமி மரணம்...
கூல்டிரிங்ஸ் சாம்பிள் டெஸ்டில் திடீர் திருப்பம்
சிறுமி தந்தைக்கு பேரிடியை கொடுத்த ரிசல்ட்
தனியார் கம்பெனி கூல்ட்ரீங்ஸை குடித்ததில் சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில், பெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, காவியா என்ற 6 வயது சிறுமி, பெட்டிக்கடையில் விற்கப்பட்ட குளிர்பானம் வாங்கி குடித்து உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது...
கடந்த மாதம் அரங்கேறிய இந்த சம்பவத்தில், சிறுமி குடித்த குளிர்பான கம்பெனிதான் தன் மகளின் இறப்பிற்கு காரணம் எனக்கூறி சிறுமியின் தந்தை போலீசில் புகாரளித்திருந்தார்..
இந்நிலையில், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் இயங்கி வந்த சம்பந்தப்பட்ட குளிர் பான நிறுவனத்தில்.. மத்திய உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்...
இந்த சூழ்நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது...
தயாளன், குளிர்பான நிறுவனத்தின் துணை மேலாளர்
"மத்திய உணவு பாதுகாப்புத்துறை எங்கள் நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்"
"எங்கள் குளிர்பானத்தில் எந்த குறையும் இல்லை என முடிவு வந்திருக்கிறது"
"நிறுவனம் மீது ராஜ்குமார் அவதூறு பரப்பியதால் இழப்பு ஏற்பட்டிருக்கிறது"
அதிகாரிகள் எடுத்துச் சென்ற சாம்பிள் முடிவுகள் வெளியாகி இருப்பதாகவும், எங்கள் குளிர்பானத்தில் எந்த குறையும் இல்லையென அவர்கள் சான்று வழங்கியிருப்பதாகவும் கூறிய நிறுவனத்தார், நிறுவனம் குறித்து அவதூறு பரப்பியதற்கு சிறுமியின் தந்தை ஐந்து கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேட்டிருக்கின்றனர்..
கார்த்திகேயன், வழக்கறிஞர்
"குளிர்பான நிறுவனம் மீது எந்த தவறும் இல்லை"
"குழந்தை வேறு சில உடல் நல பிரச்சினைகளால் இறந்திருக்கிறது"
"அவதூறு பரப்பிய சிறுமியின் தந்தை ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும்"
தொடர்ந்து, மத்திய உணவு பாதுகாப்புத்துறை அளித்த சான்றிதழை கொண்டு, செய்யாறு அடுத்த தூசி காவல் நிலையத்தில் நிறுவனத்தார் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...