அதிக மழையால் ஏற்பட்ட வெள்ளம்...அடித்துச் செல்லப்பட்ட புத்தங்கள் - வேதனையில் தவிக்கும் குடும்பம்
நெல்லையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மாற்றுத் திறனாளி தையல் தொழிலாளியான மாரியப்பன் என்பவர் தனது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்.
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். மாற்றுத் திறனாளியான இவர், தையல் தொழில் பார்த்து தனது குழந்தைகளை படிக்கவைத்து வந்தார். இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் அதிக அளவு பெய்த மழையால் இவரது வீட்டில் இருந்த உடமைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இவற்றுடன் இவரது பொறியியல் படிக்கும் மகன் மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மகளின் புத்தகங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், தங்கள் குடும்பத்தினரின் வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில் செய்வதிறியாமல் நிற்கும் நிலைக்கு மாரியப்பனின் குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்