குளத்தில் சிப்கோ தொழிற்சாலையா? "35 கிராமங்கள் பாதிப்பு" - போராட்டத்தில் குதித்த மக்கள்
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரளி குத்து குளத்தில் சிப்கோ தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வெடிக்காரன் வலசு கிராமத்தில் உள்ள அரளிக் குத்து குளத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் சுமார் 35 கிராம மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடந்த 10 நாட்களாக அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த குளத்தை அளப்பதற்காக சென்ற அதிகாரிகளிடம் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒரு வார காலத்திற்கு குளத்தை அளப்பதற்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.