ஒவ்வொரு முறையும் உயிரை பணயம் வைத்து சுடுகாட்டுக்கு செல்லும் மக்கள் | Theni | Vaigai

Update: 2023-11-07 06:59 GMT

சுடுகாட்டுக்கு செல்ல பாலம் இல்லாததால் ஆற்றில் நீச்சலடித்தபடி உடலை கொண்டு சென்று கிராம மக்கள் அடக்கம் செய்தனர்.

தேனி மாவட்டம் சங்ககோணம்பட்டி கிராமத்தின் நடுவே வைகை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் மறுகரையில் உடலை அடக்கம் செய்வதற்கான சுடுகாடு அமைந்துள்ளது. சுடுகாட்டுக்கு செல்ல பாலம் இல்லாததால் ஆற்றை கடந்தே உடலை கொண்டு சென்று வந்தனர். இந்தநிலையில் நேற்று சங்ககோணம்பட்டியில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தற்போது, மழைக்காலம் என்பதால் ஆற்றில் கழுத்தளவுக்கு தண்ணீர் செல்கிறது. வேறு வழி இல்லாததால் கிராம மக்கள் லாரி டியூப்பில் உடலை வைத்து, நீந்தியபடி மறுகரைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். எனவே, ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்