"சிறையில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எல்லாம் அவர் பாத்துப்பாரு" சிறைக்கைதி வெளியிட்ட வீடியோ .. ஈரோடில் உச்சகட்ட பரபரப்பு

Update: 2024-09-08 02:09 GMT

"சிறையில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எல்லாம் அவர் பாத்துப்பாரு" சிறைக்கைதி வெளியிட்ட வீடியோ .. ஈரோடில் உச்சகட்ட பரபரப்பு

கோபிச்செட்டிப்பாளையத்தில் சிறைக்கைதி ஒருவர் வீடியோ கால் பேசியது தொடர்பான சம்பவத்தில் வார்டன் மீது போலி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில், கைதிகளுடன் உறவினர்கள் வீடியோகாலில் பேசும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி கௌரிசங்கர் என்ற கைதி, கௌதம் என்பவருடன் வீடியோ காலில் பேசி உள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தலைமை வார்டனாக உள்ள ராஜாராம் என்பவர் கைதிகளுக்கு உதவி செய்து வருவதாகவும், அவருக்கு கூகுள் பே மூலமாக பணம் அனுப்பி உள்ளதாகவும் கௌதம் பேசி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறைத்துறையினரும், போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தினர். அதில் வார்டனாக உள்ள ராஜாராம், கைதிகளுக்கு சட்டவிரோதமாக உதவி செய்ய மறுத்த நிலையில், அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ஏற்படுத்துவதற்காக, ராஜாராமிற்கு பணம் அனுப்பி உள்ளதாக பேசியுள்ளது தெரியவந்தது. மேலும் இந்த வீடியோவை சிறைக் காவலர் ஒருவரே பதிவுசெய்து வெளிவிட்டதும் தெரியவந்துள்ளது. சிறைத்துறையினரால் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த வீடியோ வெளியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்