கேரளாவில் இருந்து வந்த மாவோயிஸ்ட்.. 2 மணி நேர விசாரணைக்கு பின்..

Update: 2024-10-24 07:41 GMT

கேரளாவில் இருந்து வந்த மாவோயிஸ்ட்.. 2 மணி நேர விசாரணைக்கு பின்..

ஈரோடு மாவட்டத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டுகளை பெற்ற வழக்கில், திருச்சூரை சேர்ந்த மாவோயிஸ்ட் ரூபேஷ், ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, வெள்ளோடு, கோபிச்செட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் போலி முகவரி கொடுத்து சிம் கார்டுகளை பெற்றதாக திருச்சூரை சேர்ந்த ரூபேஷ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ், திருப்பூரில் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணைக்காக, கேரளாவில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டார். வழக்கறிஞர் படிப்பை முடித்துள்ள ரூபேஷ், நீதிமன்றத்தில் 4 சாட்சிகளிடம் தானே குறுக்கு விசாரணை செய்தார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணைக்கு பிறகு நீதிபதி முருகேஷ் விசாரணையை அடுத்த மாதம் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து, ரூபேஷ் மீண்டும் கேரள சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்