மின் கட்டண உயர்வு பற்றி கேள்வி.. வேக வேகமாக காரில் ஏறி சென்ற IAS அதிகாரி
மின் கட்டண உயர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல், டேன்ஜெட்கோ சேர்மன் ராஜேஷ் லக்கானி, வேக வேகமாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் சோலார் பேனல் சம்பந்தமான ஆய்வில் பங்கேற்க, டேன்ஜெட்கோ சேர்மன் ராஜேஷ் லக்கானி, கோவை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மின் கட்டண உயர்வு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க மறுத்த ராஜேஷ் லக்கானி, வேக வேகமாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்...