வெயிலால் தமிழகத்தில் 8 மடங்காக அதிகரித்த செலவு.. பகீர் எச்சரிக்கை

Update: 2024-05-20 08:17 GMT

வெயிலால் தமிழகத்தில் 8 மடங்காக அதிகரித்த செலவு.. பகீர் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கடந்த இரண்டே மாதங்களில் மின்சார வாரியத்தின் கொள்முதல் மற்றும் செலவின் அளவு 8 மடங்கு வரை அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் கோடைக்காலம் நிலவும் நிலையில் மின் தேவை அதிகமாக உள்ளது. மே 2ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 20 ஆயிரத்து 830 மெகாவாட் மின் பயன்பாடு இதுவரை இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளது.தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் வழங்கிய பல கோரிக்கை மனுக்களில், மார்ச் முதல் மே வரை சுமார் 3 ஆயிரத்து 285 மில்லியன் யூனிட்களை வாங்குவதற்கு ஒப்புதல் கோரியிருக்கிறது.தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மொத்தம் 316 புள்ளி 83 கோடி செலவில் மின்சாரம் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும் கடந்த 2 மாதங்களில் மின்சார வாரியத்தின் கொள்முதல் மற்றும் செலவு 8 மடங்கு அதிகரித்து உள்ளது.இது வருவாய் இடைவெளியை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும், இறுதியில் பயன்படுத்தும் மின் நுகர்வோர் மீது சுமை விழும் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது. அதிக செலவில் மின்சாரம் கொள்முதல் செய்வதை முடிந்தவரை குறைக்க வேண்டும் என மின்வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்