வைராக்கிய உண்ணாவிரதம் கண் கலங்கவிடும் நாய்கள் பாசபோராட்டம்.. மனிதர்களை மிஞ்சிய ஜீவன்களின் பேரன்பு

Update: 2024-08-05 06:56 GMT

சாகும் வரை வைராக்கிய உண்ணாவிரதம்

கண் கலங்கவிடும் நாய்கள் பாசபோராட்டம்

மனிதர்களை மிஞ்சிய ஜீவன்களின் பேரன்பு

முண்டகையில் நிகழும் அதிசயம்

நிலச்சரிவில் உரிமையாளர்களை இழந்த நாய்கள் உண்ணாவிரதம் இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உறவுகளை இழந்து எத்தனையோ ஆயிரம் பேர் வாய் விட்டுக் கதறிக் கொண்டிருக்கின்றனர்...

பேச முடிவதால் ஆற்றாமையை வார்த்தைகளால் கொட்டி விடுகிறோம்...

ஆனால் தன்னை ஆசை ஆசையாய் வளர்த்த உரிமையாளர்களை நிலச்சரிவில் பறிகொடுத்து விட்டு வாய்விட்டுக் கதற இந்த வாயில்லா ஜீவன்களுக்கு ஏது வழி?...

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வளர்ப்பு விலங்குகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது...

நாய், பூனை, ஆடு, மாடுகள் மீட்கப்பட்டு முதலுதவி அளித்து... நோய்த்தொற்று பரவமால் இருக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது...

அதற்கான முகாம்கள் அனைத்தும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன...

நம் எஜமானர் வந்து விடுவார் என நம்பிக்கையோடு காத்திருந்த இந்த நாய்கள்...செல்லச் செல்ல நிதர்சனத்தை அறிந்து கொண்டன...

மனிதர்களாகிய நமக்கு கூட காலம் செல்லச் செல்ல காயத்தின் வடுக்கள் மறையலாம்...

ஆனால் இந்த நாய்களுக்கு அப்படியல்ல...உரிமையாளர்கள் இல்லை என தெரிந்ததும் அந்த இடத்தை விட்டே நகர மறுத்து இருக்கின்றன இந்த நன்றியுள்ள நாய்கள்...

அன்னம், ஆகாரம் எதுவும் எடுக்காமல் உண்ணாவிரதம் இருந்துள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...

பட்டினி என்றால் பசி எடுக்கும் வரை அல்ல...சாகும் வரை பட்டினி கிடக்கும் வைராக்கியமாம் இந்த நாய்களுக்கு...

Tags:    

மேலும் செய்திகள்